வாரம் 9: வீட்டுப்பாடம்
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பலாம்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஒரே சொற்கள் மீண்டும் பேசுவது தவிர்க்கலாம்.
குறிப்பு: உரையாடல் தலைப்புகள் உதாரணங்கள் பாடத்திட்டத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
பாடநூல் 8 – பகுதி 1: 2.9 – பக்கம் 57 – கருத்து விளக்கப்பகுதி
மாணவர்கள் படித்து கருத்துப் பகிர்வுப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையையும் படிக்கலாம்.
பெற்றோர் வாசித்தல் உடன்படிக்கையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பதிவிலிருந்த ஏதேனும் வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதவும்.
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை எழுதவும்.
மேலும், மறுமொழி வேறுபாடு கொண்ட வாக்கியங்களையும் அமைக்கவும்.
(உதாரணம்: ராமன் நல்லவன் / ராமன் நல்லவன் அல்ல)
அறிவுயாம் பாடத்தைப் படித்து பாடத்தில் உள்ள சொற்களைப் பற்றி தெரிந்துகொண்டு, அதன் விளக்கத்தைப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
மாணவர்கள் பாடம் படித்துப் புரிந்துகொண்டு கதையின் முடிவைச் சொல்ல வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து எழுதவும். ஆசிரியர் தகுந்த வழிகாட்டுதலை வழங்குவார்.
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதவும்.
இப்பகுதியில் சிறு பாடக்குறிப்பு எழுதும் எடுத்துக்காட்டுகள்:
வேற்றுமை – ஒரே “தாம்” பல விதம் வித்தியாசம்
சொற்கள் பயன்பாடு
வாக்கிய அமைப்பு
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் அடிப்படையில் சிறு கட்டுரை எழுதவும்.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் படித்து புரிந்து கொள்ளவும்.