Week 21
Week 21
வாரம் 21: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இடவேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 8 - பகுதி 2: 5.5 - பக்கம் 43-44 - கருத்தூன்றிப் படிப்போம் - மற்போர் - மல்யுத்தம் கதையைப் படித்து புரிந்து கொள்ளவும்.
கதையில் வரும் ஏதாவது ஒரு பத்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
கதையில் வரும் உனக்குப் பிடித்த 5 சொற்களுக்கு ஆங்கிலத்தில் பொருள் எழுதி தமிழில் வாக்கியம் அமை.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
வாக்கியம் அமை
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் 'யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது' ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
I. மல்யுத்தம் - wrestling
II. பயில்வான் - wrestler
III. மரபு - legacy
IV. கைகோர்த்து - hand-in-hand
V. வெற்றி - success
வேற்றுமை உருபு பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணையை எழுதவும்.
மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும். (சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்த வாரம் பயன்படுத்தக் கூடாது)
பாட நூல் 8 - பகுதி 2: 5.5.1. - பக்கம் 45
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை எழுதவும் கவனமாகப் படித்து சரியான விடையைக் கண்டுபிடித்து எழுத ஊக்குவிக்கவும்.
பாட நூல் 8 - பகுதி 2: 5.6. பக்கம் 45
அறிந்து கொள்வோம்
வினைமுற்று- ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லையே அது வினைமுற்று. எ.கா.: கற்றான், தின்றாள், சென்றனர், வந்தது, ஓடின இந்தக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கற்பித்தல் உத்திகள்/இலக்கணக் குறிப்புகள் வினைமுற்று பகுதியை படிக்கவும்.
பாட நூல் 8 - பகுதி 2: 5.6.1 - பக்கம் 46
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக கொடுக்கப்பட்ட சொற்களையும், வாக்கியங்களையும் கவனமாகப் படித்து சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.