வாரம் 6: வீட்டுப்பாடம்
வாசித்தல் மொழி பெயர்த்தல் பயிற்சி
பாடநூல் 8 - பகுதி 1: 2.2 - வாசிப்போம் - பக்கம் 36-40 - உலகின் தூய்மையான நகரம் கோபன்ஹேகன், டென்மார்க் கதையைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதெனும் ஒரு கட்டுரையையும் படிக்கலாம்.
பெற்றோர் வாசித்தல் உடன்படிக்கையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பதிவிலிருந்த ஏதெனும் அந்த வாசகியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்..
வாக்கியம் அமை:
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்றுக்காவது பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
சொற்களின் பிற அமைப்புகளையும் பயன்படுத்தலாம். (எ-டு) ஏழ்மையில், பேராசிரியரிடம்
தூய்மை - Cleanliness
மறுசுழற்சி - Recycling
எரிபொருள் - Fuel
எண்ணிக்கை - Count
விற்பனை - Sales
ஆற்றல் - Energy
குறிக்கோள் - Objective
பாடநூல் - பகுதி 8 - பகுதி 1: 2.2.3 - பக்கம் 42
சித்திரத்தைப் பார்த்து விடை எழுதவும். பக்கத்தின் சித்திரங்களை ஆராய்ந்து படித்து சரியான விடையை எழுதவும்.
பாடநூல் - பகுதி 8 - பகுதி 1: 2.3 - பக்கம் 43
சொல்லின் பொருள்படம் - இந்தப் பக்கத்தின் படங்களை வாசித்துப் பயிற்சி செய்யவும்.
பாடநூல் - பகுதி 8 - பகுதி 1: 2.4 - பக்கம் 44-45
சித்திரம் கொண்டு சொல்வோம் "ஏன் கொனேல மாயன்" இந்தக் கதையின் படி ஆய்வு செய்து உரையாடல் வடிவில் பயிற்சி மேற்கொள்ளவும்.
காலம் மற்றும் வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணை எழுதவும். மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும்.
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்):
மாணவர்கள் “ஓசோன் மண்டலம்” தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெயரோடு கையொப்பம் இட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத்தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதை கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.