வாரம் 13: வீட்டுப்பாடம்
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் .
மாணவர்கள் தலைப்பைப் பற்றி பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கைப்பேசி மூலம் இடவேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவ தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
வாசிப்பு பயிற்சி
பாடநூல் 8 - பகுதி 1: 3.7 பக்கம் 82-84 - கேட்டல் கருத்தறிதல் - ஈஃபிள் கோபுரம்
பாடத்தைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியம் அமை
இந்தக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கற்பிக்கும் உத்திகள்/இலக்கணக் குறிப்புகள் பகுதியை படிக்கவும்.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
1. புரட்சி - revolution
2. பொருட்காட்சி - exhibition
3. தோற்றம் - appearance
4. பொறியாளர் - engineer
5. அறிவியலாளர் - scientist
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணையை எழுதவும்.
மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளள ஒரு வாக்கியத்தில் அமைக்கவும்.
(சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளள இந்த வாரம் பயன்படுத்தக் கூடாது)
பாடநூல் 8 - பகுதி 1: 3.9. - பக்கம் 87 - கருத்து விளக்கப்படம்
மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து புரிந்து கொள்ளவும்.
பாடநூல் 8 - பகுதி 1: 3.9.1. - பக்கம் 88 - வாய்மொழியாக விடை கூறுக
மாணவர்கள் கவைமாகப் படித்து சரியான விடைகளை எழுத்துக்குறிப்யபட்டில் (notebook) எழுதவும்.
பாடநூல் 8 - பகுதி 1: 3.10 - பக்கம் 88-89 - நிரப்புவேன்
கொடுக்கப்பட்ட வாக்கியங்ககளை கவனமாகப் படித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
பாடநூல் 8 - பகுதி 1: 3.11 - பக்கம் 90 - அறிவோம்
எழுத்துகளை தேர்ந்தெடுத்து புதிய சொல் உருவாக்குக.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தி சொற்களை கண்டறிந்து கட்டத்தில் நிரப்புக.