வாரம் 12: வீட்டுப்பாடம்
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் .
மாணவர்கள் தலைப்பைப் பற்றி பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கைப்பேசி மூலம் இடவேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவ தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 8 - பகுதி 1: 3.4 - பக்கம் 75-76 - தெரிந்து கொண்டு பேசுவோம் - பைசா நகரத்துச் சாய்வுக் கோபுரம் . பாடத்தைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
பாடநூல் 8 - பகுதி 1: 3.5 - பக்கம் 77-79 - கருத்தூன்றிப் படிப்போம் - உலக வாணிகம் மையம், நியூயார்க். பாடத்தைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும். மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியம் அமை
1. இந்தக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கற்பிக்கும் உத்திகள்/இலக்கணக் குறிப்புகள் பகுதியை படிக்கவும்.
2. வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே , எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
1. தளங்கள் - stories
2. கட்டுமான - construction
3. சமன் - balance/equal
4. சதான்றம - antiquity
5. சின்னம் - symbol
வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணையை எழுதவும்.
மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளள ஒரு வாக்கியத்தில் அமைக்கவும். (சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளள இந்த வாரம் பயன்படுத்தக் கூடாது)
பாடநூல் 8 - பகுதி 1: 3.5.1. - பக்கம் 79
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை எழுதுக. உரையாடலை கவனமாகப் படித்து சரியான விடையைக் கண்டுபிடித்து எழுதவும்.
பாடநூல் 8 - பகுதி 1: 3.6. பக்கம் 80-81
அறிந்து கொள்வோம்
இலக்கணம் - பெயரெச்சம்
எச்ச வினை
• முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை எச்ச வினை எனப்படும்.
மணி “வந்து” போனான்
மரத்திலிருந்து “உதிர்ந்த” பழம்.
• இந்தத் தொடர்களில் உள்ள “வந்து” என்ற வினையும் “உதிர்ந்த” என்ற வினையும் முற்றுப் பெறாமல் உள்ளன. எனவே இவை எச் வினை எனப்படும்.
எச் வினை இரண்டு வகைப்படும்.
பெயரெச்சம் பெயரைக் கொண்டு முடியும்.
வினையெச்சம் வினையைக் கொண்டு முடியும்.
➢ பெயரெச்சம்:
காலத்தை வெளிப்படையாகக் காட்டி சொல் முடியாமல் நின்று பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிவது (தெரிநிலைப் பெயரெச்சம்). எ-கா: ஓடிய பையன், ஓடுகின்ற பையன்,
ஓடும் பையன்.
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிவது (குறிப்புப் பெயரெச்சம்). எ-கா: அழகான பெண்,
சிவப்புப் பூ.
பாடநூல் 8 - பகுதி 1: 3.6.1. - பக்கம் 82 சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக. கொடுக்கப்பட்ட வாக்கியங்களை கவனமாகப் படித்து சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.