வாரம் 17: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4–5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இடவேண்டும்.
ஒரு முழு பயனுள்ள தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுதுதல் தமிழில் பேச்சுவழக்கைக் கூடியவரை தவிர்க்கவும். ஒரே சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்புப் உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இதழில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
பாடநூல் 8 – பகுதி 2: 4.5 – பக்கம் 10–13 – கருத்தூன்றிப் படிப்போம் – பிரேசில் நாட்டின் வியத்தகு உற்பத்தி வளர்ச்சி
கதையைக் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் இரண்டு வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வாக்கியம் அமை
இந்தக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கருத்திற்கும் உத்திகளும்/இலக்கணக் குறிப்புகளும் பதிவைப் படிக்கவும்.
வாக்கியம் ‘யார்’, ‘ஏன்’, ‘எதை’, ‘எப்படி’, ‘எங்கே’, ‘எப்பொழுது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
பொருளாதாரம் – Economy
வேளாண்மை – Agriculture
மரவள்ளிக்கிழங்கு – Tapioca
சோளம் – Corn
அன்னாசிப்பழம் – Pineapple
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணையை எழுதவும்.
மேலும் ஏதாவது இரணடு வேர்ச்சொல்லை உருவுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும்.(சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேர்ச்சொல் உருவுகளை இந்த வாரம் பயன்படுத்தக் கூடாது.)
பாடநூல் 8 – பகுதி 2: 4.6.2 – பக்கம் 17 – சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக
கொடுக்கப்பட்ட வாக்கியங்களை கவனமாகப் படித்து சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
பாடநூல் 8 – பகுதி 2: 4.7 – பக்கம் 17–19 – கேட்கல் கருத்தறிதல் – நுகர்வோர் விழிப்புணர்வு (Consumer Awareness)
உரையாடலை கவனமாகப் படித்து புரிந்து கொள்ளவும்.
தெரிந்து கொள்வோம்
உற்பத்தி நாள் – manufacturing date
பயன்பாட்டு நாள் – Use-by date
வாந்தி – Vomiting
வயிற்றுப்போக்கு – Diarrhea
மயக்கம் – Dizziness
ஆபத்து – Danger
எடை – Weight
பின்பற்று – Follow
பாடநூல் 8 – பகுதி 2: 4.7.1 – பக்கம் 20
கொடுக்கப்பட்ட கேள்விகளை மாணவர்கள் கவனமாகப் படித்து சரியான விளக்கங்களை எழுத்துக்குறிப்பேட்டில் (notebook) எழுதவும்.
பாடநூல் 8 – பகுதி 2: 4.8 – பக்கம் 20 – அறிந்து கொண்டு பயன்படுத்துவோம் – வினையடை / குறிப்பு வினையெச்சம்
கொடுக்கப்பட்ட வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளவும்.
வினையடை குறிப்பு- வினையெச்சம் (Adverb)
ஒரு வினையைக் குறிப்பது மேலும் விளக்கம் (விரிவு) தருமாறு அமைவுப் சொல்.எடுத்துக்காட்டாக ‘ஓடினான்’ என்பது வினைச்சொல், ‘வேகமாக ஓடினான்’ என்று விரிந்து கூறினால், அதில் ‘வேகமாக’ என்பதுசொல் வினையடை ஆகும். வினையடையை ‘குறிப்பு வினையெச்சம்’ என்றும் கூறலாம்.எ.கா.: மெல்லச் சிறித்தான், விரைவாக வந்தான்
பாடநூல் 8 – பகுதி 2: 4.8.1 – பக்கம் 21 – சரியான விடையைத் தேர்ந்தெடுத்து தேர்வை நிரப்புக
கொடுக்கப்பட்ட வாக்கியங்களை கவனமாகப் படித்து சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.