வாரம் 5: வீட்டுப்பாடம்
வாசித்தல் மொழி பெயர்த்தல் பயிற்சி
தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பாட நூல் 8 - பகுதி 1: 1.14. - பக்கம் 31:-
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதவும்.
காலம் மற்றும் வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணை எழுதவும். மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும்.
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்):
தமிழ் மொழியின் சிறப்பு
உனக்குப் பிடித்த உலக மொழி
உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் அவற்றைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
மாணவர்கள் குறள்களுக்கேற்ற கதைகள் மற்றும் படங்களைக் கற்பனைக்கேற்றவாறு படைக்கலாம். சிறந்த படைப்புகள் தமிழ்ப்பள்ளிப் புத்தகப் பதிப்புகளில் பயன்படுத்தப்படலாம். உங்கள் படைப்புகளை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கவும்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (மக்கட்பேறு:70)
►மகன் = son
►தந்தைக்கு = தந்தை + கு = to father
►ஆற்றும் =ஆற்றுதல் = doing an action
►உதவி = help
►இவன் தந்தை= இவனுடைய தந்தை= his father
► என்நோற்றான் = என்ன + நோன்பு / தவம் + ஆற்றினான் = what penance had he done?
► கொல்லெனும் =exclamation
► சொல் = word of praise/appreciation
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
The best way a son/daughter can repay his/her parents for nurturing him/her is to behave in such a way that others say, “Oh, his/her parents must have done great penance to get him/her as their child!